கோவை கரடிமடை அருகே மண் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்ட யானை எலும்புகள்: வனத்துறை விளக்கம்

கோவை கரடிமடை அருகே மண் தோண்டும்போது யானை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. 2014ல் யானைகள் மோதலில் இறந்த யானையின் எலும்புகள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை வனச்சரகம் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி ஒன்றாவது பிளாக் பெருமாள் கோயில் சரகம் அருகில் உள்ள பட்டா நில காட்டில் மண் எடுக்கும் போது யானை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

வனத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், செப்டம்பர் 22ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது, தோண்டப்பட்ட மண்ணில் யானையின் எலும்புக்கூடு ஒன்று புதைந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.



2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர், அதே இடத்தில் புதைத்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மண் தோண்டப்பட்டதால், அந்த யானையின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



மேலும், அந்த யானையின் பிரேத பரிசோதனையின் போது, அதன் தந்தங்கள் சேகரித்து வைக்கப்பட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தந்தங்களின் அடிப்படையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அதே யானையின் உடலைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டா நிலம் வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...