அண்ணா பாணியில் திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரம் அணிவித்த நீலகிரி எம்பி ஆ ராசா

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், 90 சதவீதம் வாக்குகள் பெற்றுத் தந்த திமுக நிர்வாகிக்கு நீலகிரி எம்பி ஆ ராசா தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார். மக்களுக்கு நன்றி தெரிவித்து உண்மையாக பணியாற்ற உறுதியளித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில், நீலகிரி எம்பி ஆ ராசா, தனக்கு ஒரே பூத்தில் 90 சதவீத வாக்குகள் வாங்கிக் கொடுத்த திமுக நிர்வாகிக்கு தங்க மோதிரத்தை அணிவித்து பாராட்டினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட ஓடந்துறை, சங்கர் நகர் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் சென்று, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி 15வது வார்டு பகுதியில் மட்டும் பதிவான 925 வாக்குகளில், 826 வாக்குகள் திமுகவுக்கு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பான செயல்பாட்டிற்காக, 29வது பூத்தில் பணியாற்றிய திமுக நகர செயலாளர் முகமது யூனிசுக்கு, பேரறிஞர் அண்ணாவின் முறைப்படி தொண்டருக்கு மோதிரம் அணிவித்து கௌரவப்படுத்தும் பாலிசியின் படி, ஆ ராசா தங்க மோதிரத்தை பரிசளித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆ ராசா, "கடந்த முறை காட்டிலும் கூடுதலான வாக்குகளை எனக்கு அளித்து வெற்றி பெற செய்துள்ள மக்களுக்கு உண்மையாக நாடாளுமன்றத்தில் பணியாற்றுவேன்" என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...