உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் - வட்டாட்சியர் நேரில் விசாரணை

உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு புகார் எழுந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.



உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.1 கோடியே 56 ஆயிரத்து 298 முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.

விசாரணையின் முடிவில், 2020 ஜனவரி 6 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் செலவு ரசீதுகளில் குறைபாடுகள் இருப்பதாக குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி, அப்போதைய உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தற்போதைய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரைப்படி, 17 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உடுமலை தாசில்தார் சுந்தரம் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியாக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இறுதியாக திமுக ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்தார். இந்த விசாரணை நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...