கோவை நெகமம் பகுதியில் வீட்டு திருட்டு: கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

கோவை நெகமம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் திருடிய வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். திருடிய பொருட்கள் மீட்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் நடந்த வீட்டு திருட்டு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12 அன்று, நெகமம் பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் (47) என்பவர் தனது மகன்களைப் பார்க்க மலுமிச்சம்பட்டி சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமார் 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. CCTV காட்சிகளை ஆய்வு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த பழனிசாமி மகன் பைஜு (30) மற்றும் புருஷோத்தமன் மகன் அனுக்ரா (28) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டனர்.

விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.



அவர்களிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள், ரூ.6,90,000 பணம் மற்றும் திருட்டிற்குப் பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் 94981-81212 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலோ அல்லது 77081-00100 என்ற வாட்சப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...