கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: கருவூல அதிகாரி கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தியது. ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி ஏ. ராஜா கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.



இந்த சோதனையின் போது, கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவு கண்காணிப்பாளர் ஏ.ராஜா என்பவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ₹2000 லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்டார்.



சம்பவத்தின் விவரம்: கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர், கடந்த மே 31 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது கிராஜுவிட்டி தொகையைப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவை அணுகினார். அப்போது, அங்கிருந்த அதிகாரி ஏ.ராஜா, ₹2000 லஞ்சம் கேட்டுள்ளார்.



இது குறித்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான குழுவினர், சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கருவூலப் பிரிவின் கல்வி அதிகாரி ராஜாவை சந்தித்தார். ராஜா அந்த பணத்தை தனது மேஜை டிராயரில் வைக்குமாறு கூறினார். அதன்படி, சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் ₹2000 பணத்தை மேஜை டிராயரில் வைத்தார்.

உடனடியாக, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து, ₹2000 பணத்தை கைப்பற்றினர். லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏ.ராஜாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...