வால்பாறை சாலைகளில் அலையும் கால்நடைகள்: விபத்து அபாயம் குறித்து நகராட்சி நிர்வாகம் அலட்சியம்

வால்பாறை நகர சாலைகளில் அலையும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: வால்பாறை நகர பகுதியில் வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் அலைந்து திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் உள்ள சாலைகள் குறுகலானவை. காமராஜர் நகர் முதல் புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் சாலைகளில் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த பிரச்சினை குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அலைந்து திரியும் மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலைகளில் மாடுகளை விடுவதை தடுக்கவும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...