உடுமலை நாராயணகவி கவிராயர் 125வது பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மரியாதை

உடுமலையில் நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், எம்.பி மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Coimbatore: உடுமலை நாராயணகவி கவிராயரின் 125வது பிறந்தநாள் விழா இன்று (25.09.2023) உடுமலையில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, உடுமலை குட்டை திடலில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வரசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாராயணகவி கவிராயர் 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பூளவாடி கிராமத்தில் பிறந்தார். பொதுவுடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை கற்றறிந்த அவர், விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைகள் தோறும் பாடினார்.



இந்நிகழ்வில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் ஆ.காளீஸ்வரன் வரைந்த நாராயணகவியின் உருவப்படம் பரிசளிக்கப்பட்டது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில், உடுமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு நாராயணகவியின் பெயரைச் சூட்டுதல், மணிமண்டபத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் உடுமலை நாராயணகவி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...