மேட்டுப்பாளையம் நகராட்சியின் புதுமையான குப்பை தடுப்பு முயற்சி: வடிவேலு பாணியில் விழிப்புணர்வு பேனர்

மேட்டுப்பாளையம் நகராட்சி, பொதுக்கழிப்பிடம் அருகே குப்பை கொட்டுவதைத் தடுக்க, நடிகர் வடிவேலு பாணியில் விநோதமான பேனர் வைத்துள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி, பொதுக்கழிப்பிடம் அருகே குப்பை கொட்டுவதைத் தடுக்க புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. காட்டூர் ரயில்வே கேட் அருகே உள்ள பெண்கள் பொதுக்கழிப்பிடத்தின் முன் சிலர் தொடர்ந்து குப்பை கொட்டி வந்தனர்.

நகராட்சி நிர்வாகம் பல முறை எச்சரித்தும் இந்த செயல் தொடர்ந்தது. மேலும், கழிப்பிட சுவரில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்வதும் வழக்கமாக இருந்தது. இதனால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குப்பை கொட்டுவதையும், விளம்பர பேனர்கள் வைப்பதையும் தடுக்க கோரிக்கை விடுத்தனர்.



இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரித்தது. பின்னர், மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான பேனரை வைத்துள்ளனர். அதில், "இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்" என்று நடிகர் வடிவேலுவின் பாணியில் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த புதுமையான அணுகுமுறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வழியே செல்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். இந்த அறிவிப்புக்குப் பின் அங்கு இதுவரை யாரும் குப்பைகளை கொட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...