கோவை எக்கோ காலனியில் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையம் திறப்பு

கோவை எக்கோ காலனியில் தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டு குழந்தைகள் நல மையத்தை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.52-க்குட்பட்ட பீளமேடு, ஹட்கோ காலனி பகுதியில், தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கற்றுக்கொள்ளுதல் வசதியுடன் கூடிய நவீன குழந்தைகள் நல மையத்தினை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த குழந்தைகள் நல மையம் கோயம்புத்தூர் வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பி.லிமிடெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி, மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.



விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வேல்முருகன் எண்டர்பிரைசஸ் பொது மேலாளர் வேலுமணி, WOW EDUCARE நிறுவனர் ரூபன், இயக்குநர்கள் சந்திரசேகர், காமாட்சி ஜெயராம், நிர்வாக இயக்குநர் சாம் நிக்கோலஸ், உதவி பொறியாளர்கள் ஜெகதீஸ்வரி, கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த குழந்தைகள் நல மையம் பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...