கோவையில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் திருடிய நபர் கைது

கோவை சூலூரில் பகலில் பிச்சைக்காரராக நடித்து, இரவில் ஹெல்மெட் அணிந்து கடைகளில் திருட முயன்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் கலங்கள் சாலையில் உள்ள ஒரு பிரபல பழமுதிர் நிலையத்தில் நடந்த திருட்டு முயற்சி சம்பவம் குறித்த விசாரணையில், பகலில் பிச்சைக்காரராக நடித்து இரவில் திருடும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடையை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்ற அப்பாஸ், மறுநாள் காலை கடைக்கு வந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஆனால், கடையில் எதுவும் திருடப்படவில்லை.



இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இந்த நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் என்றும், அவர் பகல் நேரங்களில் பிச்சைக்காரராக நடித்து கடை முன்பு படுத்துக்கொண்டு கடையை கவனித்து, இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கடைகளுக்குள் புகுந்து திருட முயற்சிப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ராமசாமியை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று (செப்டம்பர் 24) சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...