வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறு: பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

வால்பாறையில் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று மாலை 7 மணி அளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் சுப்பிரமணி கோவில் அருகே திருப்பூர் பகுதியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் மகேந்திரா வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே வழியில் வெல்லமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் மற்றும் நடத்துனரை, குடிபோதையில் இருந்த கார் நிறுத்தியவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.



தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

ஓட்டுநர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் (35), கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), கொங்கு மண்டல இளைஞர் அணி துணைத் தலைவர் வெங்கடேஷ் (25), மண்டல இளைஞர் அணி செயலாளர் அருண் (30), கோதண்டம் (46) மற்றும் மண்டல பொதுச் செயலாளர் சசிக்குமார் (42) ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...