குருவின் பிறந்த நாளில் மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி: வானதி சீனிவாசன் எம்எல்ஏ நினைவஞ்சலி

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரது அரசியல் வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பாஜக முன்னாள் தேசியத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, பள்ளிப் படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ்.இல் இணைந்தார். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். தடைக்கு எதிராக மதுரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறு வயதிலேயே கைது செய்யப்பட்டார்.

பண்டித் தீன்தயாள் உபாத்தியாய மறைவுக்குப் பின் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று ஜன சங்கத்தின் முழுநேர ஊழியரானார். கச்சத் தீவு விவகாரத்தில் இந்திரா காந்தியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எமர்ஜென்சி காலத்திலும், 1977 தேர்தலிலும் முக்கிய பங்காற்றினார்.

1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெறும் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கொள்கைக்காக வாழ்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, தனது அரசியல் குரு பண்டித் தீந்தயாள் உபாத்தியாயவின் பிறந்த நாளான செப்டம்பர் 25 அன்றே மறைந்தார்.

காமராஜருக்குப் பின் தேசியக் கட்சி ஒன்றின் தேசியத் தலைவரான தமிழர் என்ற பெருமையை பெற்ற ஜனா கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...