வால்பாறை நகர மன்றக் கூட்டத்தை 13 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: வளர்ச்சிப் பணிகள் தடையால் எதிர்ப்பு

வால்பாறை நகர மன்றக் கூட்டத்தில் 13 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர். வளர்ச்சிப் பணிகளுக்கு மண்டல இயக்குனரின் ஒப்புதல் தேவை என்ற அறிவிப்பால் எதிர்ப்பு தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகர மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, நகர மன்ற துணைத் தலைவர் தாமா செந்தில்குமார், மற்றும் நகராட்சி ஆணையாளர் விநாயகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.



வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 21 வார்டு கவுன்சிலர்களும் அதில் இரண்டு பேர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக உள்ளனர். மதியம் 12 மணி அளவில் துவங்கப்பட்ட நகர மன்ற கூட்டத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட 8 பேர்கள் மட்டுமே பங்கு பெற்றனர். மற்ற 13 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வராமல் இருந்தனர்.



தமிழக அரசின் நிதி நெருக்கடி காரணத்தினால் நகராட்சிகளில் வளர்ச்சி பணிகளை சென்னை மண்டல இயக்குனர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று பணிகளை செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வால்பாறையில் ஒரு வருட காலமாக அதிகமான வளர்ச்சிப் பணிகள் செய்யவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதம் கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்றைய கூட்டத்தில் அதே பிரச்சினையைக் கூறி கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். கூட்டம் துவங்கி ஐந்து நிமிடத்தில் நிறைவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மழைக்காலங்களில் அவசர பணி செய்வதற்கு திருப்பூர் மண்டல இயக்குனரிடம் ஒப்புதல் பெற்று பணிகள் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தை புறக்கணித்தவர்களிடம் கேட்டபொழுது, "வால்பாறையில் நகராட்சி சார்பாக செய்யப்படக்கூடிய அனைத்து வேலைகளையும் திருப்பூர் மண்டல இயக்குனர் அவர்களிடம் தெரிவித்து அவர் சென்னை நகராட்சி மண்டல இயக்குனரிடம் ஒப்புதல் பெற்ற பின் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகின்றது," என்றனர்.

"வால்பாறை மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு ஓட்டு போட்டு எங்களை கவுன்சிலராக தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு பணி செய்ய நாங்கள் தயாராக உள்ள நிலையில் அரசு அதிகாரிகள் பணிகளை செய்யவிடாமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதை வலியுறுத்தி நாங்கள் இன்று நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்தோம்," என்று கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...