சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், தனது மீடியா நிறுவனம் மீண்டும் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


மதுரை சிறையில் இருந்து செப்டம்பர் 25 மாலை விடுதலை செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், தான் உண்மைகளை பேசுவதால்தான் தன்னை புழல் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றி, இரண்டாவது முறையாக கைது செய்ததாகக் குற்றம்சாட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை சந்தித்தவர் இல்லை என்றும், தந்தையின் நிழலில் வளர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவுக்கு மீடியா ஏழு மாதங்களாக உண்மைகளை வெளிப்படுத்தியதால்தான் அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாகவும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், தனது வீடு சீல் வைக்கப்பட்டதாகவும், தனது தாயாரின் பென்ஷன் கணக்குகள் உள்பட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மிக கவனமாக உள்ளதாக சவுக்கு சங்கர் குறிப்பிட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மெத்தனால் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் உள்துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கடிதம் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பல உயிர்கள் பலியாகியிருக்காது என்றும், இது போன்ற பல உண்மைகள் மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே சவுக்கு மீடியா முடக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்பு இருந்தது போல அதே வீரியத்துடன் தொடர்ந்து செயல்பட்டு மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்வதாகவும், சில காலங்களுக்குப் பிறகு சவுக்கு மீடியா மீண்டும் இயங்கத் தொடங்கும் என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்தார். கோவை சிறையில் தனது கை உடைக்கப்பட்டதாகவும், மற்ற சிறைகளில் தன்னை வழக்கமான கைதி போலவே நடத்தினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...