கோவை போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பிரிவின் 5வது ஆண்டு விழாவில் போக்குவரத்து காவலர்களுக்கான இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவின் ஐந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் செப்டம்பர் 25 அன்று நடத்தப்பட்டது.

இந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நுரையீரல் சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர் உன்னித்தன், டாக்டர் ஸ்ரீகாந்த், டாக்டர் நாகராஜன் மற்றும் டாக்டர் நந்த கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உலக நுரையீரல் நல தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார், குறட்டை பாதிப்புகள் குறித்த பரிசோதனை முகாமையும் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் தினமும் பணியாற்றும் போது பல்வேறு வகையான மாசுக்களால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன் கருதி இந்த நுரையீரல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துஸ்தான் மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் சிவசைலம் மேற்கொண்டிருந்தார். இந்த முகாம் போக்குவரத்து காவலர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...