கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல்: ரூ.3.25 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்களை கடத்திய 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து அரசுக்கு வரி செலுத்தாமல், உரிய ஆவணங்கள் இன்றி, அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட கூடுதலாக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து சென்னை போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் மற்றும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் கோபாலபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.



இந்த சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றியும், வரி செலுத்தாமலும், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த லாரிகளுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சுரேஷ் கூறுகையில், "அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நடவடிக்கை மூலம், சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்துவதை தடுக்கவும், அரசுக்கு வரி வருவாயை உறுதி செய்யவும் போக்குவரத்து துறை முனைப்புடன் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...