செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது மகிழ்ச்சி - அமைச்சர் முத்துசாமி

கோவையில் உழவர் தின விழா கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றார்.



Coimbatore: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் "உழவர் தின விழா" கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது நல்ல செய்தி. உச்ச நீதிமன்றம் இதில் சரியான முடிவை வழங்கியுள்ளது. இது மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்," என்று கூறினார்.

மேலும் அவர், "இதற்கு முன்னர் பல சிரமங்களும், தேவையில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்று அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

செந்தில் பாலாஜிக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து, "தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள்," என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...