கல்லாரில் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவு

மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் நான்கு நாட்கள் நடைபெற்ற தென்மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நிறைவடைந்தன. 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் கடந்த நான்கு நாட்களாக தென் மண்டல சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன.

இந்த போட்டிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றன. 14, 17, 19 வயதுடையோருக்கென நாக்கவுட் முறையில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 1500க்கும் மேற்பட்ட ஹாக்கி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

14, 17, 19 ஆகிய மூன்று பிரிவுகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவர்கள் மூன்று வயது பிரிவுகளிலும் முதல் இடத்தைப் பெற்று வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றினர். மேலும், 14 வயதுடையோர் பிரிவில் சென்னை ஜே.சி.எஃப் காலணி பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி பிடித்தது.

இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி பத்ரிநாராயணன் மற்றும் கவிஞர் கவிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...