முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்: கோவையில் திமுகவினர் கொண்டாட்டம்

கோவையின் பூ மார்க்கெட் மற்றும் 27வது வார்டில் திமுகவினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை கொண்டாடினர். பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து கோவையில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பூ மார்க்கெட் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இந்த நிகழ்வில் திமுகவின் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், போனஸ்பாபு, என்ஜினியர் அய்யாசாமி, ஆலாந்துறை ராஜேந்திரன், ரகுநாத், மாணவரணி பிரச்சனா, அருண், ஜெகன், நிகால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதேபோல, கோவை 27வது வார்டிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில், திமுக கழக மூத்த முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த செய்தி கோவை திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை இந்த மகிழ்ச்சி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...