செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது: வானதி சீனிவாசன் கண்டனம்

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாகக் கருதப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்ததும் புனிதராக மாறியதாக விமர்சித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.26) அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் இருக்கும்போது ஊழல்வாதியாகக் கருதப்பட்ட செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்ததும் புனிதராகி விட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2011-2016 அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் தனது பதிவில், "செந்தில் பாலாஜியை நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜாமின் மட்டுமே வழங்கியுள்ளது என்பதை திமுகவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதையும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இப்போது, "உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது" என வரவேற்றிருப்பது முரண்பாடாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

"ஊழல் குற்றவாளியை, அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்ட ஒருவரை கொண்டாடுவதற்கு வெட்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதால் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கக் கூடாது" என்று வானதி சீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...