அன்னூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்து: காலில் எலும்பு முறிவு

அன்னூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சரித்திர குற்றவாளி தப்பி ஓடும்போது வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்துக்குள்ளாகி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பூபதி என்பவர் எல்லப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நபர் ஒருவர் பூபதியின் செல்போனை பறித்ததோடு, அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.



பின்னர் அந்த நபர் தப்பியோட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளி ஜெர்மன் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேட்டில் குற்றவாளியாக உள்ளவர் என்பதும் தெரிய வந்தது.

தற்போது ஜெர்மன் ராகேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...