கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா

கோவை அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதி, அவிநாசி மேற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி. அருண்குமார் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.



அவிநாசி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பியநல்லூர், வேட்டுவபாளையம், தெக்கலூர், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், கானூர், நம்பியாம்பாளையம், இராமநாதபுரம், கருவலூர், உப்பிலிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்வில் அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் G வேலுச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக இணை செயலாளர் லதா சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் செயல்வீரர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...