திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 52 பயணிகள் உயிர் தப்பினர்

தாராபுரம் அருகே திருப்பூர்-திருச்செந்தூர் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 52 பயணிகள் உயிர் தப்பினர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று நள்ளிரவு ஒரு அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, தாராபுரம் பேருந்து நிலையம் அருகே அலங்கியம் பைபாஸ் சாலையில் வந்தபோது திடீரென முன்பக்க ஸ்டேரிங் அருகே தீப்பிடித்தது.

பேருந்தின் ஓட்டுனர் கணேசமூர்த்தி (வயது 55) சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை பைபாஸ் சாலையில் ஓரமாக நிறுத்தினார். அவர் உடனடியாக அனைத்து பயணிகளிடமும் தீப்பிடித்த விவரத்தைத் தெரிவித்தார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.



பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீ வேகமாகப் பரவி, பேருந்து முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

பயணிகள் திருச்செந்தூர் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோது, இடப்பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து வந்த தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மாயவன், மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா மற்றும் தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை சமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பேருந்து தீ விபத்து சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...