மேட்டுப்பாளையத்தில் போலி காவலர் கைது: இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்றது அம்பலம்

மேட்டுப்பாளையத்தில் போலி காவலராக நடித்து இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டார். சம்பவம் நள்ளிரவில் நடந்தது, பின்னர் உண்மை காவல்துறையினரால் குற்றவாளி பிடிபட்டார்.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் போலி காவலராக நடித்து இருசக்கர வாகன ஓட்டுநரிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளி, நேற்று இரவு மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்து விட்டு நள்ளிரவில் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர், தான் ஒரு பயிற்சி காவலர் என்று கூறி வாகனச் சோதனை என்ற பெயரில் ஆவணங்களைக் கேட்டுள்ளார். மேலும், பெரியசாமியிடம் ரூ.500 பணம் வேண்டும், இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வேன் என்று மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளார்.

தொடர்ந்து சாலையில் சென்ற போது மற்றொரு பகுதியில் உண்மையான காவல்துறையினர் நிற்பதைப் பெரியசாமி பார்த்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெரியசாமி, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றவாளி காரமடை பெரிய தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமியின் மகன் பிரகாஷ் (40) என்பது தெரிய வந்தது. பஞ்சர் கடை நடத்தும் அவர், போலி காவலராக நடித்து வந்தது அம்பலமானது.

பிரகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...