பெண்களை இழிவுபடுத்த வேண்டாம் - குக் வித் கோமாளி சர்ச்சை குறித்து அறந்தாங்கி நிஷா கருத்து

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவதை கண்டித்த அவர், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார்.



Coimbatore: கோவை காளபட்டி பகுதியில் நடைபெற்ற கே.ஜி.எஃப் கண்காட்சி மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பெண்களின் முன்னேற்றம் குறித்தும், சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சர்ச்சை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய அறந்தாங்கி நிஷா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். "பெரியார் சொன்னது போல, பெண்களிடம் கரண்டியை புடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுத்து பாருங்கள். இன்று பெண்கள் தான் அதிகம் மேடை ஏறுகின்றனர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஆண்கள் இருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போது, அறந்தாங்கி நிஷா, "அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு என்ன நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன். ஒரு பெண்ணாக நான் இதை கண்டிக்கிறேன். ஒரு பெண்ணை தயவு செய்து இழிவாக பேச வேண்டாம்," என்று தெரிவித்தார்.

தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் பேசிய அவர், "தற்போது சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நல்ல நகைச்சுவை பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சி. சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'வள்ளிமயில்' படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படம் வெளியானால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...