கோவையில் கஞ்சா விற்பனை: 71 வயது மூதாட்டி கைது; கஞ்சா சாக்லேட் விற்றவர் மீது குண்டாஸ்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 71 வயது மூதாட்டி கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்ற நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டதோடு, கோவில்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி அருகே சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு பெண்ணிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தையாவின் மனைவி சந்தாமணி (71) என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.



இதேபோல், கோவில்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி 34 கிலோ கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார் சமல் (40) கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில், சஞ்சய்குமார் சமல் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...