வங்கதேச குடியேற்றவாசிகளை கைது செய்து நாடு கடத்த கோரி மனு

கோவை மற்றும் திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேச நாட்டவரை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் முதலமைச்சர் மற்றும் உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.


Coimbatore: வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் குடியேறியுள்ள நபர்களை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று கோரி இன்று (27.09.2023) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் தமிழக உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை தேடி வங்கதேசத்திலிருந்து பலர் சட்டவிரோதமாக எந்த ஆவணங்களும் இன்றி குடியேறி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தமிழகத்திற்கு வந்து தங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக பலர் தமிழகத்திற்கு வர முயற்சிப்பதாகவும், இது எதிர்காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கோவை மற்றும் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச நாட்டவரை உடனடியாக கைது செய்து, அவர்களின் குற்றப் பின்னணியை விசாரித்து, நடவடிக்கை எடுத்து நாடு கடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்தார். இந்நிகழ்வில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநிலத் தலைவர் எம். வினோத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...