கோவை குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது

கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. 45 நகரங்களில் இருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, தொழில்துறை காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன.


கோவை: கோவையில் உள்ள குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் 'Thalir Innovation Fest 2024' நடைபெற்றது. யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை பதிப்பும் குமரகுரு கல்லூரியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.



"INSPIRE our Younger Generation towards Building Bharat" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



மாணவர்களின் படைப்புத்திறன், நுண் சிந்தனைத் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் உள்ளிட்ட திறன்களை வளர்க்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் 30 அறிவியல் கண்காட்சி அரங்குகளும், 4 தொழில்துறை காட்சி அரங்குகளும் இடம் பெற்றன. இவை மாணவர்கள் அறிவியலின் பல்வேறு பிரிவுகள் குறித்து புரிந்து கொள்ளவும், தொழில்துறையில் தற்போதைய வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டன.



இயற்கை விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள், மோட்டார், ரோபோட், டிரோன் தொழில்நுட்பங்கள் குறித்த அரங்குகளை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். குறிப்பாக இந்நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றான ஜவுளிக்கான அரங்கில் இடம்பெற்ற நேரடி கைத்தறி செயல்முறை விளக்கங்களை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...