குமாரபாளையம் கொள்ளை சம்பவம்: கைது செய்யப்பட்ட குற்றவாளி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: நாமக்கல் குமாரபாளையத்தில் நடந்த கன்டெய்னர் கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குமாரபாளையத்தில் சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் லாரியை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அப்போது கன்டெய்னரில் கட்டு கட்டாக பணம் மற்றும் சொகுசு காருடன் 7 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றனர். இதனால் காவல்துறையினர் கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட, மீதமுள்ள 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.



தற்போது அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...