பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடந்த இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை பகுதியில் இன்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பழனிசெவ்வேள் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் வந்து புதிய உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் குணசேகரன், மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி, நகரத் தலைவர் சுப்பராயன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...