மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக தலைவரின் கணவரின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மன்றக் கூட்டம் பரபரப்பாக முடிவடைந்தது. திமுகவைச் சேர்ந்த தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, திமுக தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் பேரூராட்சியில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ரங்கநாதன், தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



பேரூராட்சிப் பகுதியில் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு குறைகளைக் கூறி திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக, தேதி குறிப்பிடாமல் இன்று நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...