பீளமேடு மேம்பால ஏறுதள தூண் அமைப்பை மாற்ற அதிமுக மனு: கோவை ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்படும் மேம்பால ஏறுதள தூணின் இடத்தை மாற்றக் கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பாரம்பரிய சாலையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணியை மாற்றி அமைக்க வேண்டி வலியுறுத்தி அதிமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், பாரம்பரியம் மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K. அர்சுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது.



பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் பீளமேடு துரைசாமி, வசந்தாலயா மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், விளாங்குறிச்சி சாலை மீட்பு குழுவின் விஜயக்குமார், செந்தில்குமார், நந்த கோபால், ராமமூர்த்தி பிரகாஷ், பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...