நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.


பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட நடவடிக்கைகளில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் நிலையில், இந்த உத்தரவு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...