போக்சோ வழக்கில் கைதான ஈஷா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் கேள்வி

கோவையில் ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, போக்சோ வழக்கில் கைதான ஈஷா மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்காததற்கு விளக்கம் கோரியுள்ளது. வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.



கோவை: கோவையில் ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், பேராசிரியர் காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவ முகாமில் பணிபுரிந்த மருத்துவர் சரவண மூர்த்தி, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக கடந்த 6ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் கேள்வி எழுப்பினர்.



சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசுகையில், "ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்யா யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, பெண் மாணவர்களை பரிசோதிக்க ஒரு பெண் மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் டாக்டர் சரவண மூர்த்தி எப்படி பள்ளிக்குள் சென்றார்? இது குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்டவைகளிடம் கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "மருத்துவ முகாமிற்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் கிளினிக் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. வழக்கு விசாரணை ஆரம்பித்ததும் விசாரணை அதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டார். வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈஷாவின் மீது ஏன் இந்த அனுதாபம்?" என்று கேள்வி எழுப்பினார்.

2021 ஆம் ஆண்டு கூட்டு பலாத்கார வழக்கிற்காக ஈஷா மீது கோவை பேரூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த எஃப்ஐஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பியூஸ் மனுஷ் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பெண் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்படுவதாகவும், ஆனால் சட்டத்தின் கீழ் பெண் புகாரை வாபஸ் பெற இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறையினர் மருத்துவர் மீதான வழக்கை மெத்தனமாக கையாள்வதாக குற்றம் சாட்டிய பியூஸ் மனுஷ், "இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அது கோவைக்கு அவப்பெயர். இந்த வழக்கிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை முறையாக நடைபெற வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...