பத்மஸ்ரீ பாப்பம்மாள் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் (110) உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் நேற்று இரவு காலமானார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் என்கிற பாப்பம்மாள் (110) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் தனது இளம் வயதிலிருந்தே விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்த அவரது ஆர்வத்தைக் கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது 109வது வயதில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பேத்தி கமலம் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

பாப்பம்மாள் இறந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக வந்து அவரது உடலுக்கு காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...