புரட்டாசி சனிக்கிழமையன்று பொள்ளாச்சி அருகே ராமர் கோவிலில் பக்தர்கள் திரள் - வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கொங்கு மண்டல பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமர் பண்ணை ராமர் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



இந்நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.



இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சுப்பேகவுண்டன்புதூர் மற்றும் நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த பாரதி வள்ளி கும்மியாட்ட கலைக்குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மியாட்டத்தில், வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர். இந்த அற்புதமான கலை நிகழ்ச்சியைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை கொண்டாட்டங்களும், பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் இணைந்து, மீனாட்சிபுரம் ராமர் கோவிலில் ஒரு விழாக்கோலம் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...