கோவையில் கோழி கடை ஊழியர் பூரிக் கட்டையால் அடித்துக் கொலை - மனைவி கைது

கோவையில், கோழி கடை ஊழியர் நந்தகுமார் தனது மனைவி சஹானா பேகத்தால் பூரிக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக நடந்த இச்சம்பவத்தில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா எஸ்.மேட்டுப்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த ராஜனின் மகன் நந்தகுமார், மதுக்கரையைச் சேர்ந்த சஹானா பேகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நந்தகுமார் இடிகரை ராமானுஜம் நகரில் குடியிருந்து கொண்டு மணிகாரம் பாளையத்தில் உள்ள ஒரு கோழி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

கடந்த 25 ஆம் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சஹானா பேகம், வீட்டில் இருந்த பூரிக் கட்டையால் நந்தகுமாரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. கோபமடைந்த நந்தகுமார் தன் மகனை அழைத்துக் கொண்டு கோழி கடைக்குச் சென்று அங்கேயே படுத்துத் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் கோழிக்கடை உரிமையாளர் பிரகாஷ் வந்து நந்தகுமாரை எழுப்பியபோது, அவர் மயங்கிய நிலையில் இருந்தார். சந்தேகம் அடைந்த அவர் மருத்துவ உதவியை நாடினார். மருத்துவர்கள் வந்து பரிசோதித்தபோது நந்தகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.

பின்னர், நந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கிணத்துக்கடவு எஸ்.மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றபோது, அவரது தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் தலையில் அடிபட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.



இதனையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, நந்தகுமாரின் மனைவி சஹானா பேகத்தைக் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...