உடுமலை திருப்பதி கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.



கோவில் நுழைவாயில் பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளை சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



இன்று காலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். சாமி தரிசனத்துக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி கோவில் நிர்வாகம் முன்னதாகவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...