உடுமலையில் அமைச்சர் சாமிநாதன் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்

உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார். 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் மொத்தம் 6894.22 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும்.



திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பி சாமிநாதன் தண்ணீர் திறந்து வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் புதிய பாசன பகுதிகளான திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்கள் பாசன பகுதிகளுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி புதிய பாசன பகுதிகளுக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 440 கன அடி வீதம் 2,661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இந்த தண்ணீர் திறப்பு இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 தேதி வரை 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் மொத்தம் 6894.22 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த தண்ணீர் திறப்பின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அமராவதி அணையின் மொத்த நீர்த்தேக்க அளவு தொண்ணூறு அடிகள் என்றால், தற்பொழுது 87.14 அடி நீர் இருப்பதாகவும், நீர்வரத்து 30 கன அடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பி சாமிநாதன், "அமராவதி அணையில் இருந்து இன்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்று மதகு வழியாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் தற்பொழுது காவிரி ஆற்றில் கலந்து வருகின்றது. இனிவரும் காலங்களில் அமராவதி பாசன பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்து உபரி நீர் சேகரிக்கப்படும்" என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...