திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: இந்து மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பூஜை

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சையை கண்டித்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சையைக் கண்டித்தும், கோயில் புனிதத்தைக் காக்கவும் இந்து மக்கள் கட்சி சார்பாக கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில், கோயில் புனிதத்தை கெடுக்கும் கயவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வுக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் புகைப்படத்தை பிரசாதமாக வழங்கினார்.

இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு எதிராக தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், கோயில்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...