கோவை மாநகராட்சி ஆணையர் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வடக்கு மண்டலத்தில் அவிநாசி சாலை, பீளமேடு, குரும்பர் வீதி பகுதிகளில் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இப்பணியை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.



வார்டு எண் 27-க்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பேருந்து நிறுத்தம், வி.கே.சாலை, பொரிக்கடை சந்து, குரும்பர் வீதி 1 & 2, அவிநாசி பிரதான சாலை சென்டர் மீடியன் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.



100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.





இப்பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுதல், தேவையில்லாத பொருட்களை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், புகை மருந்து அடித்தல், சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் தேங்கியுள்ள மண்களை அகற்றுதல், மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகள், புதர்களை அகற்றுதல் போன்றவை அடங்கும்.



இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் திருமூர்த்தி, நாசர், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பவுன்ராஜ், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...