கோவை ராமநாதபுரத்தில் பைக் திருட்டு: இருவர் கைது

கோவை ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள் வாகன சோதனையின் போது பிடிபட்டனர்.



கோவை: கோவை நகரில் அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் இரு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.



செப்டம்பர் 27 அன்று ராமநாதபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நவ்புல் ரஹ்மான் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சப்வான் என தெரியவந்தது.

மேலும், நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...