பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் மீது குடியிருப்புவாசி தாக்குதல்

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட 45 வயது நபரை குடியிருப்புவாசி ஒருவர் தாக்கி விரட்டினார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், ரங்கம்மாள் கோவில் தெருவில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சைக்கிளில் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தெருவில் நின்று கொண்டு, கோலமிடும் பெண்கள், கடைக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து தனது கால்சட்டையைக் கழற்றி நடுவீதியில் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசி ஒருவர், அந்த நபரை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளார்.

விசாரணையில், இந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இத்தகைய நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...