கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 28 அன்று நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி ஆணையாளர் மாசிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.



இந்த முக்கிய நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க. சிவகுமார், நகர்நல அலுவலர் மருத்துவர் கே. பூபதி, உதவி ஆணையர் துரைமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கே. மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ரன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...