கோவையில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா: வண்ண ஆடைகளில் சிறுமியர், பெண்கள் நடனம்

கோவையில் சிம்மக்குரல் கலைக்குழு ஏற்பாட்டில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற்றது. வண்ண ஆடைகளில் சிறுமியர், பெண்கள் பம்பை இசைக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர்.


Coimbatore: கோவையில் சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் நடைபெற்ற ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா மக்களை கவர்ந்தது. விளாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடினர்.

சிம்மக்குரல் கலைக்குழு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், வள்ளிகும்மியாட்டம், காவடியாட்டம் ஆகிய கலைகள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்பு கிராமப்புறங்களில் மட்டுமே இந்த கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் இது போன்ற தமிழக பாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்று வருகின்றனர்.



திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், காளைகளும் இடம்பெற்றன. பாரம்பரிய கலைகள் குறித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிம்மக்குரல் கலைக்குழுவினரின் பம்பை இசைக்கு ஏற்ப கிராமிய பக்தி பாடல்கள் பாடப்பட்டன. அதற்கேற்ப, சிறுமியர்கள் மற்றும் இளம்பெண்கள் வண்ண உடைகளுடன் காலில் சலங்கை கட்டி ஒருசேர நடன அசைவுகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...