உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: பொள்ளாச்சியில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கௌதம், நகரத் திமுக துணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் என பலரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...