விஸ்வ ஹிந்து பரிஷத் மதுக்கரை பிரகண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுக்கரையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் செட்டிபாளையம் ஜெபக்கூடம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நடவடிக்கை கோரப்பட்டது.


Coimbatore: விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மதுக்கரை பிரகண்ட கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பிரகண்ட தலைவர் C.V. பழனிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளர் முனைவர் சாரதா, அமர்நாத் சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் C.N. பரமசிவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முதல் தீர்மானத்தில், திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் மாமிசக் கொழுப்பு கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், கோவை செட்டிபாளையம் ஜெயம் நகரில் அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தின் மீது மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.



கூட்டத்தின் நிறைவில், பிரகண்ட செயலாளர் ராஜேஷ்குமார் மகிழ்வுரையாற்றினார். இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...