அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவரும் கல்வியாளருமான கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார்.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.



பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் (திட்டங்கள்) அரவிந்த், மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை செய்துள்ள சாதனைகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தனது உரையில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ தர்மத்தோடு செயல்படுவதாகவும், அரவிந்த் கண் மருத்துவமனை போன்று சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அரசுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுவதாகவும் கூறினார்.



மேலும் அவர், தமிழக முதல்வர் கோவையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னைக்கு இணையாக கோவை முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். "நியூயார்க்கையும் வாஷிங்டனையும் போன்று கோவையும் சென்னையும் வரப்போகிறது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...