கோவையில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு

கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் "தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்" என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவி தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி.ப. யதீஸ்குமார் "தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள்" குறித்து உரையாற்றினார்.

முனைவர் யதீஸ்குமார் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகள் பற்றி விரிவாக விளக்கினார். பாண்டியர்களின் பழைய துறைமுகங்களான கொற்கை மற்றும் அழகன்குளம் பற்றியும், தாமிரபரணி நாகரிகத்தின் பழமை குறித்தும் தொல்லியல் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.



ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும், அவற்றின் காலம் அறிவியல் முறைப்படி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் அகழ்வாராய்ச்சி களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர். மேலும், கல்படுகைகள் உள்ள பகுதிக்கும் சென்று ஆய்வுகளை நேரில் கண்டனர்.

இந்த நிகழ்வை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையமும் வாணவராயர் பவுண்டேஷனும் ஏற்பாடு செய்திருந்தன. கொங்கல்நகரம் களப்பயணத்தை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...