கோவை அரசு மருத்துவமனையில் கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம்

நாமக்கல் அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர் ஆசார் அலி, காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி அவரிடம் வாக்குமூலம் பெற்றார்.


Coimbatore: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொள்ளையன் ஆசார் அலியிடம் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே கண்டெய்னரில் இருந்து பணத்துடன் தப்பிக்க முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான ஆசார் அலி, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இந்நிலையில், இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, குற்றவாளி ஆசார் அலியிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...